1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: சனி, 11 ஆகஸ்ட் 2018 (20:10 IST)

பாஜகவில் இணைந்த அதிமுக மாவட்ட செயலாளர்

வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் ஆகியவற்றில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பாஜகவில் அதிமுக பிரமுகர் ஒருவர் இணைந்துள்ளார்.
 
திருப்பூர் மாவட்டத்தில் அஇஅதிமுக மருத்துவர்கள் அணியில் மாவட்ட செயலாளராக இருந்த  டாக்டர் செந்தில் நாதன் என்பவர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் முன்னிலையில் சேர்ந்துள்ளார். இந்த தகவலை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அவர்கள் தனது டுவிட்டரில் உறுதி செய்து பாஜகவில் இணைந்த டாக்டர் செந்தில்நாதனுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
 
அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்தது குறித்து நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். இரண்டு கட்சிகளும் ஒன்றாகி ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் எதற்காக இந்த தாவல்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.