தமிழக காங்கிரசில் குத்து வெட்டு
தமிழக காங்கிரஸ்-ல் குத்து வெட்டு
தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு ஹெச்.வசந்தகுமாரும், விஜயதாரணியும் கடுமையாக மோதி வருகின்றனர்.
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், திமுக கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், 8 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹெச்.வசந்தகுமார் மற்றும் விஜயதாரணி விளவங்கோடு தொகுதியிலும் வெற்றிக் கனியை பறித்தனர்.
இந்த நிலையில், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியைப் பெற விஜயதாரணி மற்றும் வசந்தகுமார் ஆகியோர் கடுமையாக மோதி வருகின்றனர். இதற்காக இவர்கள் டெல்லியில் தங்களுக்கு வேண்டிய தலைவர்கள் மூலம் காய் நகர்த்தி வருகின்றனர்.