திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. பொ‌ன்மொ‌ழிக‌ள்
Written By Sasikala
Last Updated : புதன், 25 நவம்பர் 2015 (17:44 IST)

கீதோபச்சாரம்

கடவுள் கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு சொன்ன உபதேசம்.


 

 
நீ எதைக் கொண்டு வந்தாய்
     அதை நீ இழப்பதற்கு
 
எதை நீ படைத்தாய்
     அது வீணாவதற்கு
 
எதை நீ எடுத்துக்கொண்டாயோ
     அது இங்கிருந்து எடுக்கப்பட்டது
 
எதை கொடுத்தாயோ
     அது இங்கேயே கொடுக்கப்படவேண்டியது
 
எது நடந்ததோ
     அது நன்றாகவே நடந்தது
 
எது நடக்கிறதோ
     அதுவும் நன்றாகவே நடக்கும்
 
எது நடக்க இருக்கிறதோ
     அது நன்றாகவே நடக்கும்
 
உன்னுடையது எதை இழந்தாய்
     எதற்காக நீ அழுகிறாய்
 
எது இன்று உன்னுடையதோ
     அது நாளை மற்றொருவருடையது
 
இந்த மாற்றம் உலக நியதியாகும்.