1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 டிசம்பர் 2024 (14:25 IST)

ஆளுனரை விஜய் சந்தித்தது எதற்காக? தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

Vijay Governor Meet

இன்று தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவியை த.வெ.க தலைவர் விஜய் நேரில் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். மேலும் இன்று அவர் ஆளுனர் ஆர்.என்.ரவியையும் சந்தித்த நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 

ஆளுனருடனான சந்திப்பு குறித்து தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்கள் தலைமையில் மேதகு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களைச் சந்தித்து மனு அளித்தோம்.

 

எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.

 

மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.

 

இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநர் அவர்கள், அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார்” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K