செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: திங்கள், 14 பிப்ரவரி 2022 (16:13 IST)

ரிஷபம் - மாசி மாத பலன்கள் 2022

(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) - கிரகநிலை: ராசியில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் செவ், சுக் - பாக்கிய ஸ்தானத்தில் புதன், சனி - தொழில் ஸ்தானத்தில் குரு, சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.


பலன்:
பிறருடைய தவறுகளை எளிதில் மன்னிக்கும் குணமுடைய ரிஷப ராசிக்காரர்களே இந்த மாதம் திட்டமிட்டபடி காரியங்களை செய்து  முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். வேளை தவறி சாப்பிட வேண்டி இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல்  ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த சச்சரவுகள் நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில்  இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும். மேலிடத்தின் கனிவான பார்வை விழும்.

குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள்  இருக்கும்.

பெண்களுக்கு முக்கியமான  வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சனைகளை கண்டால் ஒதுங்கி சென்று விடுவது  நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணகூடுதலாக உழைக்க  வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். போட்டிகளில் பரிசுகளை அள்ளுவீர்கள்.

அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி இந்த மாதம் அமையும். திட்டமிட்டபடி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்ச்னைகள் நீங்கும். மனதில் உற்சாகம் பிறக்கும்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம்  மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும்.  பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில்  இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.  சரக்குகளை  பாதுகாப்பாக வைப்பது நல்லது.

ரோகிணி:
இந்த மாதம்  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு  அதிகரிக்கும்.   எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள்  உங்கள் சொல்படி நடப்பது  மனதுக்கு  மகிழ்ச்சி தரும்.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்:
இந்த மாதம்  சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாக்கு வன்மையால்  காரிய வெற்றி பெறுவார்கள். குடும்பத்தில்  வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே  திடீர் கருத்து  வேற்றுமை ஏற்படலாம்.

பரிகாரம்: ஸ்ரீமஹாவிஷ்ணுவை வணங்குவதால்  வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்டகிழமைகள்: செவ்வாய், புதன்
சந்திராஷ்டம தினங்கள்: பிப் 25, 26, 27
அதிர்ஷ்ட தினங்கள்: பிப் 19, 20.