புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: வெள்ளி, 13 ஜூலை 2018 (14:04 IST)

தனுசு ராசிக்கான ஆடி மாத ராசி பலன்கள்

தனுசு (மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)

வில்லுக்கு சீரிய சிந்தனை என்பதற்கேற்ப எதிலும் நேர்மையுடனும் நேர்மறையான சிந்தனைகளுடனும் இருந்து காரியத்தை சாதிக்கும் தனுசு ராசி அன்பர்களே




இந்த மாதம் உங்கள் திறமையில் இருந்து வந்த பிந்தங்கிய நிலை இனி மாறும். முயற்சிகளில் தடைகள் வந்தாலும், இறைவனின் வல்லமையால் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணிப்பீர்கள். பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். வருங்காலத்திற்குத் தேவையான முதலீடுகளை அதற்குண்டான நபர்களிடம் ஆலோசனைகள் செய்து முதலீடுகள் செய்வீர்கள்.

குடும்பத்தில் வீட்டில் சின்னச்சின்ன வாக்குவாதங்கள் தலைதூக்கலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவதால் நிலைமையைச் சமாளிக்கலாம். உறவினர் வகையிலும் கூட ஒருவருடன் மனஸ்தாபம் உருவாகலாம். சிலருக்கு விரும்பத்தாகாத செய்தி ஒன்று தூரத்துலிருந்து வரலாம். கணவன், மனைவியரிடையே அன்பு மேலோங்கும்.

உத்தியோகஸ்தர்கள் உடன் வேலை செய்வோரின் ஆதரவால் பிரச்சனைகளைச் சமாளிப்பீர்கள். தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு சிறு வாக்கு வாதங்கள் வரலாம். காரிய அனுகூலம் கிட்டும். பணம் சம்மந்தப்பட்ட இடங்களில் நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். புதிய கடன்கள் வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள்.

தொழிலதிபர்கள் தொழிலில் தேவையில்லாத பண விரயம் ஏற்படலாம். கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். உங்கள் கூட்டாளிகளுடன் கருத்து மோதல்கள் வரலாம். சிலருக்கு வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் மிக அவசியம். முற்போக்கு சிந்தனை உங்களுக்கு மேலோங்கும்.

பெண்கள் அதீத எதிர்பார்ப்புகள் வேண்டாம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அதிக வேலைப்பளு உண்டாகலாம். எந்த வேலையிலும் கவனச் சிதறல் ஏற்படாமல் கவனமாக இருங்கள். வெற்றி உங்களைத் தேடி வரும். நீங்கள் நம்பிப் பழகும் ஒருவரால் நீங்கள் ஏமாற்றப் படுவதை உங்கள் மனம் ஏற்றுக் கொள்ளாது. ஆகையால் கவனமாக இருங்கள்.

கலைஞர்கள் கலைத்துறையில் உள்ளவர்களுக்கு உன்னதமான காலகட்டமிது. கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்கும். அதனால் சிக்கல்கள் தீரும். பணிச்சுமையின் காரணமாக அசதி ஏற்படும். தேவைகள் பூர்த்தியாகும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும். பிற மதத்தினரால் புதிய அனுகூலம் உண்டாகும்.

குறிப்பாக நினைத்த காரியத்தில் வெற்றி.அரசியல்வாதிகள் தீவிர முயற்சிக்குப் பின்னரே சிலருக்கு நடக்க வேண்டிய காரியங்கள் நடைபெறும். சில கட்டங்களில் நன்மை, தீமை கலந்தே நடைபெற்றாலும் இறுதியில் நன்மையே உண்டாகும். அரசு விவகாரங்களில் கையெழுத்திடும் போதும், ஜாமீன் இடும் போதும் ஒருமுறைக்கு பல்முறையேனும் யோசித்து செயல்படுவது நன்மையைத் தரும்.

மாணவர்கள் படிப்பில் நிதானமும் கவனமும் தேவை. சுற்றுலாச் செல்ல நேர்ந்தால் அனைவருடன் ஒற்றுமையாக பழகி பக்குவமாக நடந்து கொள்ளுதல் அவசியம். கேட்ட உதவிகள் தாராளமாக கிடைக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் உங்களுக்குப் பிடித்தமான குரு கோவிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்