செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: திங்கள், 16 நவம்பர் 2020 (16:04 IST)

மகரம்: கார்த்திகை மாத ராசி பலன்கள்

(உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்) - கிரகநிலை: ராசியில் குரு - தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய் - பஞ்சம  ஸ்தானத்தில்  ராஹூ - பாக்கிய  ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் புதன்  - லாப ஸ்தானத்தில் கேது, சூர்யன், சந்திரன் - அயன, சயன,  போக ஸ்தானத்தில் சனி என  கிரகங்கள் வலம் வருகின்றன. 
 

பலன்:
சோதனைகளை தகர்த்தெறியும் திறன் கொண்ட மகர ராசிக்காரர்களே இந்த மாதம் எதிலும் நிதானமாக இருப்பது நன்மை தரும். பணவரத்து உண்டாகும். வேற்று  மொழி பேசும் நபரால்  நன்மை உண்டாகும். புத்தி சாதுரியத்தால்  எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து  கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம்.
 
குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிøடேய நெருக்கம் உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.
 
தொழிலில் புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காண்பீர்கள். புதிய கிளைகள்  தொடங்க நினைப்பவர்கள்  அதற்கான முயற்சியை தள்ளி போடுவது நல்லது. 
 
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். பெண்களுக்கு முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சனைகளை கண்டால் ஒதுங்கி சென்று விடுவது நல்லது.
 
கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புக்களை நழுவவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. தொழிலில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். வரவேண்டிய சம்பள பாக்கிகள் கிடைக்காமல் இழுபறி நிலையில் இருக்கும். பொருளாதாரநிலையிலும் தடைகள் உண்டாகும். தேவையற்ற இடமாற்றங்களால் உடல்நிலை  பாதிப்படையும். சேமிப்புக் குறையும்.
 
அரசியல்வாதிகள் மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்தால் மட்டுமே மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் தடைகள் நிலவும் என்பதாலும் எதையும் முழுமையாக முடிக்க முடியாத சூழ்நிலைகளும் உண்டாகும். 
 
மாணவர்களுக்கு: வீண் அலைச்சலை தவிர்ப்பதும், பாடங்களில் சந்தேகம் நீங்கி படிப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.
 
உத்திராடம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து  தாமதப்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை  சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.
 
திருவோணம்:
இந்த மாதம் பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது. கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி  திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.  எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். மன சஞ்சலம் ஏற்படுத்தும். திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். 
 
அவிட்டம் 1,2 பாதம்:
இந்த மாதம் அரசியலில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் நற்பெயர் கிடைக்கும்.
 
மாணவர்களுக்கு  கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை மருத்துவ செலவு உண்டாகலாம்.  வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.
 
பரிகாரம்: சனிக்கிழமையில் விநாயகரை வழிபடுவது கஷ்டங்களை போக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி
சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 30; டிசம்பர் 1.