1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: வியாழன், 14 பிப்ரவரி 2019 (17:55 IST)

கடகம் - மாசி மாத பலன்கள்

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) - கிரக நிலை: ராசியில் ராஹூ - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், சனி - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம்  வருகின்றன.
பலன்:
 
பேச்சாற்றலால் அனைவரையும் கவரும் கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும்  அதற்கு ஏற்றார் போல் இருக்கும். மற்றவர்களது உதவியும் கிடைக்கும். சாதூர்யமாக பேசி எதிலும் வெற்றி காண்பீர்கள். அனுபவப் பூர்வமான  அறிவுத்திறன் அதிகரிக்கும்.
 
தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பீர்கள். பங்கு மார்க்கெட் லாபம் ஓரளவு கூடும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
 
குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். சிலர் அதற்கான முயற்சியில்  ஈடுபடுவார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்யம்  உண்டாகும்.
 
பெண்களுக்கு எதிலும் காலதாமதம் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். பணவரத்து தாமதப்படலாம்.
 
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அறிவியல், கணித பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற  உதவும்.
 
கலைத்துறையினருக்கு புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம்  தேவை. வெளியூர் வெளிநாடு செல்ல வேண்டி வரலாம்.
 
அரசியல் துறையினருக்கு அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம்.  உங்களுக்கு எதிரானவர்கள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம்.
 
புனர் பூசம் 4ம் பாதம்:
 
இந்த மாதம் பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம். எதிர்நீச்சல் போட்டாவது  வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டால் கடனில்லாத கண்ணிய வாழ்க்கை அமையும்.
 
பூசம்:
 
இந்த மாதம் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். புதிய ஒப்பந்தங்களில் கையழுத்திடும் வாய்ப்பினைப்  பெறுவீர்கள். போட்டி பொறாமைகளை சமாளிக்கக்கூடிய ஆற்றலும் அதிகரிக்கும்.
 
ஆயில்யம்:
 
இந்த மாதம் உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது வீண்பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். எதிர்பார்க்கும்  உயர்வுகள் சில தடைகளுக்குப்பின் அமையும். பயணங்களால் சற்றே அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன்மூலம் அனுகூலமானப் பலன்களும்  உண்டாகும்.
 
பரிகாரம்: அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று தரிசித்து  அர்ச்சனை செய்து வழிபட மனக்குழப்பம் நீங்கும். எதிலும் வெற்றி  உண்டாகும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
 
அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ரவரி26, 27
 
சந்திராஷ்டம தினங்கள்: மார்ச்5, 6, 7.