ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 29 ஜனவரி 2021 (10:40 IST)

வலிமை ஓபனிங் சாங்கை முடித்த யுவன்… மேலும் ஒரு ஸ்பெஷல் இருக்குதாம்!

வலிமை படத்தில் அஜித் நடிக்கும் அறிமுகப் பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவே பாடியுள்ளாராம்.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் முக்கியமானக் காட்சிகளை வெளிநாடுகளில் சென்று படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் வலிமை படத்தில் அஜித் ஓபனிங் சாங் பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அஜித்துக்காக மெனக்கெட்டு பாடலை உருவாக்கியுள்ள யுவன் ஷங்கர் ராஜா அந்த பாடலை அவரே பாடவும் செய்துள்ளாராம். இந்த பாடல் படத்தின் கவர்ச்சிகளில் ஒன்றாக இருக்கும் என சொல்லப்படுகிறது.