செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2024 (14:47 IST)

'கோட்’ பாடலுக்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனம்.. இன்ஸ்டா அக்கவுன்ட்டை டெலிட் செய்த யுவன்..!

சமீபத்தில் வெளியான 'கோட்’ படத்தின் சிங்கிள் பாடலுக்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனம் காரணமாக யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை  டெலிட் செய்து விட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'கோட்’.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் விசில் போடு என்ற சிங்கிள் பாடல் வெளியானது என்பதும் விஜய் பாடிய இந்த பாடலுக்கு 30 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் கிடைத்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் அதே நேரத்தில் இந்த பாடல் எதிர்பார்த்த அளவு இல்லை என்றும் அனிருத் இசை அமைத்திருந்தால் இந்த பாடல் இன்னும் சூப்பராக இருந்திருக்கும் என்றும் பலர் கருத்து தெரிவித்தனர்

மேலும் இந்த பாடல் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அதில் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தத்தை அடுத்து யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை டெலிட் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran