புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 19 மார்ச் 2021 (08:41 IST)

யோகிபாபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

யோகிபாபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் முன்னணியில் இருக்கும் யோகிபாபு கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி ஹீரோவாகவும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
யோகி பாபு ஹீரோவாக நடித்த நான்கு திரைப்படங்கள் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் அவை ஒவ்வொன்றாக அடுத்தடுத்த சில வாரங்களில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் யோகி பாபு ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த இன்னொரு திரைப்படம் ’எங்கேடா இருந்தே இவ்வளவு நாளா’ என்ற படம். இந்த படம் ரிலீசுக்கு தயாராகி சமீபத்தில் சென்சாருக்கு சென்று ’யூ’ சான்றிதழ் பெற்றது. கெவின் என்பவர் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படம் தற்போது மார்ச் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
யோகிபாபு மட்டும் மொட்ட ராஜேந்திரன் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி கதையம்சம் கொண்டது என்றும் ஒரு காட்சியில் கூட சீரியசாக இருக்காது என்றும் படம் பார்ப்பவர்கள் இரண்டரை மணி நேரம் சிரித்துவிட்டு வரலாம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படம் யோகிபாபுவின் வெற்றி படமாக அமையும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்