வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 24 மே 2019 (18:12 IST)

வெளியானது! யோகி பாபுவின் "தர்மபிரபு" ரிலீஸ் தேதி

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு முதல்முறையாக ஹீரோவுக்கு இணையான ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். எமதர்மனாக ராதாரவியும், எமதர்மனின் மகனாக யோகிபாபுவும் இந்த படத்தில் நடித்து வருவதாக தெரிகிறது. மேலும் நடிகை ரேகா யோகிபாபுவுக்கு அம்மாவாக நடிக்கின்றார்.
 
யோகிபாபு, கருணாகரன், ராதாரவி, ரமேஷ் திலக், ரேகா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை முத்துகுமரன் இயக்கி வருகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில், சான் லோகேஷ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்ததையடுத்து  ரிலீசுக்கு தயாராகியுள்ளது தர்மப்பிரபு. இந்நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். தர்மப்பிரபு படம் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.