யாஷிகாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இயக்குனர் யார்? அதிர்ச்சி மீடூ தகவல்
சின்மயி ஆரம்பித்து வைத்த மீடூ விவகாரம் தற்போது அமலாபால் வரை நீண்டு கொண்டே போவதால் திரையுலகில் இருக்கும் பிரபலங்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தங்கள் பெயர் எப்போது இந்த மீடூ லிஸ்ட்டில் வெளிவரும் என்ற அச்சத்தில் பிரபலங்கள் இருக்கும் நிலையில் சற்றுமுன் பேட்டி அளித்த யாஷிகா ஆனந்த் தானும் ஒரு இயக்குனரால் பாலியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
'இருட்டு அறையில் முரட்டு குத்து' உள்பட ஒருசில படங்களில் நடித்தவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நெகட்டிவ்வாக பிரபலமானவருமான யாஷிகா இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, 'திரையுலகில் வாய்ப்பு தேடுபவர்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதாகவும், அந்த வகையில் நானும் வாய்ப்பு தேடும் போது இயக்குனர் ஒருவரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டேன் என்றும் யாஷிகா கூறியுள்ளார்.
யாஷிகா நடித்ததே ஒருசில படங்கள் தான் என்பதால் அவருக்கு தொல்லை கொடுத்த இயக்குனர் யாராக இருக்கும் என்ற யூகங்களை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். மீடூ குற்றச்சாட்டு சொல்லும் நடிகைகள் தைரியமாக யாரால் பாதிக்கப்பட்டோம் என்ற தகவலையும் கூற வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.