வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: புதன், 11 ஆகஸ்ட் 2021 (17:04 IST)

பிறக்கும் போது வெறும் 212 கிராம்… 13 மாத போராட்டத்துக்குப் பின் வீடு செல்லும் குழந்தை!

சிங்கப்பூரில் பிறகும் வெறும் 212 கிராம் மட்டுமே எடை இருந்த குழந்தை பிழைப்பது அரிது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சிங்கப்பூரைச் சேர்ந்த தம்பதிகள் குவெக் வி லியாங் மற்றும் வாங் மி லிங். இரண்டாவது முறையாக வாங்கி மி லிங் கர்ப்பமுற்ற போது அவருக்கு வித்தியாசமான ஒரு பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அவர் சிறுநீரில் அளவுக்கு அதிகமாக புரதம் வெளியேறியுள்ளது. இதனால் அவருக்கு ஆறாவது மாதத்திலேயே குறை பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது.

இந்த குழந்தை வெறும் 212 கிராம் மட்டுமே இருந்துள்ளது. உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த குழந்தையாக இந்த குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் குழந்தை பிறப்பது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் 13 மாத காலம் உயிர்காக்கும் கருவிக்குள் வைக்கப்பட்ட குழந்தை இப்போது வீடு திரும்பியுள்ளது. இப்போது குழந்தை 6 கிலோ இருந்தாலும் மூச்சுத் திணறல் பிரச்சனை இருப்பதால் வெண்டிலேட்டர் வசதியுடன் சுவாசித்து வருகிறது.