1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 6 ஜூன் 2017 (15:05 IST)

உடலுறவு பற்றி ஒரு பெண் பேசினால் ஒழுக்கமற்றவளா? நடிகை கொந்தளிப்பு

ஒரு பெண் தனது பாலியல் வாழ்க்கை குறித்து பேசினால், அவள் ஒழுக்கமற்றவள் என முத்திரை குத்திவிடுகிறார்கள் என பிரபல ஹாலிவுட் நடிகை ஸ்கார்லட் ஜோஹன்சன் தெரிவித்துள்ளார்.


 

 
ஹாலிவுட் சினிமாவில் ஏஞ்சலினா ஜோலிக்கு அடுத்து அதிரடி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஸ்கார்லட் ஜோஹன்சன். இவர் தற்போது காஸ்மோபாலிட்டன் இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-
 
பெண்கள் உடலுறவில் அனுபவிப்பதை குறித்து வெளிப்படையாக பேசக்கூடாது. அப்படி பேசினால் இந்த சமூகத்தில் அவள் ஒரு பைத்தியம், ஒழுக்கமற்றவள் என பல தவறான வார்த்தைகளை கொண்டு முத்திரை குத்திவிடுகிறார்கள். 
 
இந்த நிலை மாற வேண்டும். பெண்கள் பாலியல் குறித்து பேச வேண்டும், என்று தெரிவித்தார்.