வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 30 ஆகஸ்ட் 2017 (13:20 IST)

அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட அஜித்துக்கு நடிகர் மன்சூர் அலிகான் எழுதிய கடிதம்

கடந்த வாரம் 24-ஆம் தேதி அஜித்தின் விவேகம் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றபோதிலும், இப்போது வரை வசூலில் மாஸ் காட்டி வருகிறது. ரசிகர்கள் கொடுத்திருக்கும் வரவேற்பை பார்த்து படக்குழுவும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

 
இந்நிலையில் யாருக்கும் பயப்படாமல் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை கூறும் நடிகர் மன்சூர் அலிகான். தற்போது அவர் அஜித்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தம்பி அஜித்துக்கு மன்சூர் அலிகானின் அன்பு வணக்கங்கள், தாங்கள் வெளிநாட்டிலேயே முழு படத்தையும் அயல் தொழில்கலைஞர்களை வைத்து எடுத்துவிட்டீர்கள். தம்பி அஜித்துக்கு தமிழ்நாட்டில் பயங்கர ரசிகர் பட்டாளம் இருக்கிறது, தமிழ் நாட்டில் படம் எடுத்து தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும்.
 
படம் ஓட வேண்டும் என்று திருப்பதி சென்று சாமி கும்பிடுகிறீர். தமிழ் நாட்டில் படம் ஓட அப்பன் முருகன் கோயில்களுக்கு  வந்திருக்க கூடாதா? உரிமையுடன், நடிப்புத் தொழிலாளி மன்சூரலிகான் என்று தன்னுடைய கருத்தை எழுதியுள்ளார்.