ராதிகா இல்லாமல் சித்தி 2 தொடருமா? படக்குழுவினர் எடுத்த முடிவு!
நடிகை ராதிகா சித்தி 2 தொடரில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
800 பட விவகாரத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கும் முரளிதரனுக்கும் ஆதரவாக பேசியவர்களில் நடிகை ராதிகாவும் ஒருவர். அவர் சன் தொலைக்காட்சிக்கு சொந்தமான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பயிற்சியாளராக முரளிதரன் நீடித்து வருகிறார். அவரை அந்த பணியில் இருந்து நீக்க சொல்லி போராடுவார்களா என்பது போல பேசியிருந்தார்.
இது சன் தொலைக்காட்சி நிறுவனத்து அதிருப்தியை ஏற்படுத்த ராதிகா தயாரித்து நடித்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி 2 தொலைக்காட்சி தொடரை முடித்துக் கொள்ளுமாறும் சொல்லியுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அதை ராதிகா மறுத்து வந்தார். இந்நிலையில் இப்போது அவர் சித்தி 2 தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அந்த தொடருக்கே அடையாளமாக இருந்த ராதிகா இல்லாமல் தொடரை எப்படி தொடர்வது என்ற யோசனையில் படக்க்ழு யோசனையில் உள்ளதாம். ராதிகா இல்லாமல் ஒரு குறிப்பிட்ட வாரம் ஒளிபரப்பி அதற்கான வரவேற்பைப் பொறுத்து அதன் பின்னர் தொடரலாமா இல்லை சீரியலை நிறுத்தி விடலாமா என்ற யோசனையில் உள்ளதாம் படக்குழு.