ஓபிஎஸ் பெயரை மூன்று முறை ஏன் கூறினார் விஜய்சேதுபதி
மாதம் ஒரு படம் ரிலீஸ் செய்ய ஒரு நடிகரால் முடியும் என்றால் அது விஜய்சேதுபதிதான். போன மாசம் விக்ரம் வேதா, இந்த மாசம் புரியாத புதிர், அடுத்த மாசம் கருப்பன் என பிசியாக உள்ளார். விஜய்சேதுபதி.
மேலும் கைவசம் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களை வைத்துள்ளார். இந்த நிலையில் இன்று அவர் நடித்த 'கருப்பன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.
இந்த விழாவில் பேசிய விஜய்சேதுபதி நான் மூன்று பேர்களுக்கு நிச்சயமாக நன்றி கூற வேண்டும் என்று கூறிவிட்டு, ஒன்று பன்னீர் செல்வம். இரண்டு பன்னீர் செல்வம். மூன்று பன்னீர் செல்வம்” என்று கூறினார்.
எதற்காக ஓபிஎஸ் பெயரை மூன்று முறை கூறி நன்றி கூறுகிறார் என எல்லோரும் ஆச்சரியப்பட அவர் இயக்குனர் பன்னீர்செல்வத்தை தான் கூறினார் என்பது புரிய பத்திரிகையாளர்கள் உள்பட அனைவருக்கும் சில நிமிடங்கள் ஆனது.