திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 3 டிசம்பர் 2020 (11:07 IST)

நடிகைகள் எல்லாம் சுற்றுலாவுக்கு மாலத்தீவு செல்ல என்ன காரணம்? வெளியான ரகசியம்!

சமீபகாலமாக இந்தியாவைச் சேர்ந்த நடிகைகள் எல்லாம் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதும் அங்கே கவர்ச்சிகரமானப் புகைப்படங்களை எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிடுவதும் அதிகமாகியுள்ளது.

நடிகைகள் வேதிகா, டாப்ஸி, சமந்தா உள்ளிட்ட நடிகைகள் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று அங்கே எடுக்கப்பட்ட கவர்ச்சிகரமான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வந்தனர். அதே போல புதிதாக திருமணமான காஜல் அகர்வாலும் தேனிலவுக்கு மாலத்தீவுக்கு சென்றார். நடிகைகள் பொதுவாக சுற்றுலா மற்றும் தேனிலவு என்றால் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதுதான் வழக்கம்.

ஆனால் இப்போது மாலத்தீவுக்கு செல்வது அதிகரித்துள்ளதன் பின்னணியில் ஒரு காரணம் உள்ளது. மாலத்தீவுகளில் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் நடிகைகளை இல்வசமாக அந்த தீவுக்கு வரவழைத்து அவர்களுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்டவற்றை இலவசமாக அளிப்பது. அப்படி வரும் நடிகைகளுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகளில் ஒன்று நிறைய புகைப்படங்களை எடுத்து சமூகவலைதளங்களில் பகிரவேண்டும் என்பதாம். இந்த காரணத்துக்காகதான் நடிகைகள் மாலத்தீவுக்கு இப்போது படையெடுக்க ஆரம்பித்துள்ளனராம்.