1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 1 ஜூலை 2018 (16:28 IST)

மன அழுத்தம் இருந்தால் இதை செய்யுங்கள் - நடிகை தமன்னா அறிவுரை

மன அழுதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை செய்தால் அந்த பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம் என நடிகை தமன்னா கூறியுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் திரையுலகில் கலக்கிக் கொண்டிருக்கும் தமன்னா சினிமாவுக்கு வந்தபோது எப்படி இருந்தாரோ அதே தோற்றத்திலேயே இப்போதும் இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது,
 
சினிமா என்பது சவால்கள் நிறைந்த தொழில், நெருக்கடி மிக்க இந்த தொழிலில் சரியாக தூங்க முடியாது நேரத்திற்கு சாப்பிடவும் முடியாது. இதனால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிரச்சனை ஏற்படும்.
இதனைத் தடுக்க நான் தினமும் காலை ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்வேன். அதில் அரைமணி நேரம் சாதாரண உடற்பயிற்சிகள் செய்வேன். கடைசி அரைமணி நேரத்தில் யோகா, தியானம் செய்வேன். இதனால் உடலில் இருக்கும் வி‌ஷ பொருட்கள் வெளியேறும். சருமம் அழகாகும். மனஉளைச்சல் குறையும். யோகா தான் மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஒரே மருந்து என தமன்னா கூறியுள்ளார்.