திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 24 நவம்பர் 2021 (19:56 IST)

நலமாக வரவேண்டும் சகோதரரே - இளையராஜா டுவீட்

நடிகர் கமல்ஹாசன் விரைவில் நலமாகி வர வேண்டுமென  இசைஞானி இளையராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு கொரனோ பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில்  மருத்துவமனை நிர்வாகம் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், நடிகரும், மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் உடல்நிலை சீராக உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இசைஞானி இளையராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.அதில், நலமாக வரவேண்டும் சகோதரரே  கலை உலகை ஆ……….ஹா…………என ஆச்சரியப்பட வைக்க வேண்டும் வாருங்கள் சீக்கிரம் எனத் தெரிவித்துள்ளார்.