சென்னையில் புதிய சாதனை படைத்தது 'விவேகம்' வசூல்
தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியான நிலையில் இந்த படத்தை எப்படியும் ஓட விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு புளூசட்டை மாறன் உள்பட பலர் தீயாய் வேலை செய்தனர். இந்த நிலையில் பல தடைகளையும் எதிர்ப்புகளையும் மீறி இந்த படம் சென்னை பாக்ஸ் ஆபீசில் புதிய சாதனை படைத்துள்ளது.
இந்த படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ.7.14 கோடி வசூல் செய்துள்ளது. இதற்கு முன்னர் ரூ.6.95 கோடி வசூலித்து நம்பர் ஒன் இடத்தில் இருந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சென்னையில் இதுவரை ஒரே வாரத்தில் ரூ.6 கோடிக்கும் மேல் வசூல் செய்த ஐந்து படங்களில் 'விவேகம்' படமும் ஒன்று என்பதும் ஒரே வாரத்தில் ரூ.7 கோடிக்கும் மேல் வசூல் செய்த ஒரே படம் 'விவேகம்' மட்டுமே என்பதும் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.