விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் ஓடிடியில் ரிலீஸ்?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் படம் ஓடிடியில் வெளியாகிறதா என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஷ்ணு விஷால். இவர் இயக்குநர் கெளதம் மேனன், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் எஃப்.ஐ.ஆர்.
இப்படம் தியேட்டரில் ரிலீஸாகும் எனக் கூறப்பட்ட நிலையில், திடீரென்று ஓடிடியில் ரிலீஸாக கூறப்பட்டது. இதுகுறித்து நடிகர் விஷணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில், எஃப்.ஐ.ஆர் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய முயற்சித்து வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.