திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 8 நவம்பர் 2021 (14:52 IST)

கனவுப்படத்தை எடுக்க இயக்குனர் அவதாரம் எடுக்கும் விஷால்!

நடிகர் விஷால் அடுத்த ஆண்டு இறுதியில் தனது கனவுப்படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

நடிகர் விஷால் இப்போது 3 படங்களில் நடித்து வருகிறார். அதில் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்ட துப்பறிவாளன் 2 படத்தை அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கி ஏப்ரலில் முடித்துக் கொண்டு வர உள்ளார். அதையடுத்து அக்டோபர் 2022 ல் தன்னுடைய கனவுப்படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

நடிகராவதற்கு முன்பாக நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் விஷால். அதனால் நீண்ட வருடமாக இயக்குனராகும் ஆசை அவர் மனதில் இருந்த நிலையில் இப்போது அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள உள்ளார்.