புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (21:38 IST)

விஷால் அடுத்த படத்தின் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஷால் நடித்து வரும் படங்களில் ஒன்று வீரமே வாகை சூடும் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தின் ரிலீஸ் தேதியை சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் இந்த படம் ஜனவரி 26ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் சமீபத்தில் தொடங்கிய நிலையில் தற்போது அடுத்த கட்டமாக வீரமே வாகை சூடும் படத்தின் சிங்கிள் பாடல் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள சிங்கிள் பாடல் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
விஷால், யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதாபாரதி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பதும் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.