அர்ஜுன் ரெட்டியாக மாறிய துருவ் விக்ரம்: வைரலாகும் புகைப்படம்!!
நடிகர் விக்ரமின் மகள் திருமணம் நேற்று நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம்.
துருவ் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்ரேயா ஷர்மா நடிக்க, படத்தை பாலா இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இது ஒரு பக்கம் இருக்க, தற்போது வைரலாவதி துருவ் விக்ரமின் அர்ஜுன் ரெட்டி கெட்அப்தான். ஆம், தனது சகோதரியின் திருமணத்தில் நீண்ட முடியுடன், தாடி வளர்த்து புதிய தோற்றத்தில் இருந்தார்.
அர்ஜுன் ரெட்டி படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இது தமிழில் ரீமேக் ஆவதால் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.