1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 31 அக்டோபர் 2023 (07:37 IST)

ப்ளாப் படம் கொடுத்த இயக்குனரின் அடுத்த படத்தில் விக்ரம்!

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவான அன்பறிவு திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தை அட்லியின் உதவியாளர் அஸ்வின் என்பவர் இயக்கினார். வழக்கமான டபுள் ஹீரோ கதைகளில் வரும் அதே ஆள்மாறாட்ட கதையை எடுத்து வைத்திருந்தாலும், அதிலும் கொஞ்சம் கூட சுவாரஸ்யமே இல்லாமல் உருவாக்கி இருப்பதாக ரசிகர்கள் சமூகவலைதளங்களில் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் இயக்குனர் அஸ்வின் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.