புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 13 மே 2022 (08:31 IST)

பிரபல சமையல் கலைஞரை சந்தித்த கமல்… வைரல் புகைப்படம்!

நடிகர் கமல்ஹாசன் தற்போது விக்ரம் படத்தின் ரிலீஸ் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை ஒரே நாளில் மே 15 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நிகழ்வு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது கமல் பிரபல சமையல் கலைஞரான கேரளாவைச் சேர்ந்த சுரேஷ் பிள்ளையோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. விக்ரம் படத்தில் ஏற்கனவே சமையல் கலைஞரான வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.