75 வது நாளில் ரூ.500 கோடி வசூல் குவித்த ''விக்ரம்'' படம்!
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் ரூ.500 கோடி வசூலை ஈட்டியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில், நடிகர் கமல் தயாரித்து நடித்த படம் விக்ரம். இவருடன் இணைந்து,விஜய்சேதுபதில், பகத்பாசில், சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்தனர்.
ரூ.140 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் கடந்த வாரம் ரூ.450 கோடி ரூபாய்க்கு மேல் வசூலீட்டி சாதனை படைத்தது.
இப்படத்தைப் பார்த்த சினிமா நட்சத்திரங்கள், சினிமா விமர்சகர்கள் உள்ளிட்ட பலரும் இப்படத்தை கொண்டாடினர்.
இந்தியாவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள விக்ரம் படம் தொடர்ந்து இன்று 75 வது நாளாக தியேட்டர்களில் ஓடி வசூல் குவித்து வருகிறது.
தமிழ் படங்களில் அதிக வசூலீட்டிய படங்களில் முதலிடத்தில் உள்ள கமலின் விக்ரம் படம் இன்று 75 வது நாளில் மொத்தம் ரூ.500 கோடி வசூல் குவித்துள்ளது. இதனால் கமல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.