பிச்சைக்காரன், சைத்தான், திருடன், ஹிட்லர்.... இதெல்லாம் விஜய் ஆண்டனி நடிக்கிற படங்கள்
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான முதல் படம், நான். நெகடிவ் ஹீரோ கதை. அன்றிலிருந்து இந்த நெகடிவ் விஷயம் அவரது படங்களை பற்றிக் கொண்டுவிட்டது.
தற்போது அவர் நடித்து வரும் படம், பிச்சைக்காரன். சொல்லாமலே, பூ படங்களை இயக்கிய சசி இயக்கம். அறிவிப்பு இல்லாமல் படத்தை தொடங்கி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளனர். கடைசிகட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வருகிறது.
இந்தப் படம் தவிர திருடன், சைத்தான், ஹிட்லர் ஆகிய படங்களிலும் நடிக்க உள்ளார். எல்லாமே எதிர்மறை பெயர்கள். விஜய் ஆண்டனி என்றாலே எதிர்மறை என நினைத்துவிடப் போகிறார்கள்.