செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 18 மே 2022 (09:59 IST)

”அம்மா ஆயிட்டா மூளைல உக்காந்து …” எல்லை மீறி கமெண்ட் செய்த ரசிகைக்கு நடிகையின் பதில்!

நடிகை விஜயலட்சுமி தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து பிரபலம் ஆனவர்.

இயக்குனர் அகத்தியன் மகள்களில் ஒருவரான விஜயலட்சுமி சென்னை 28, சித்திரம் பேசுதடி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானர். அதன் பின்னர் பண்டிகை படத்தின் இயக்குனரை திருமணம் செய்துகொண்ட அவருக்கு தற்போது ஒரு மகன் இருக்கிறார். சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் விஜயலட்சுமி சமீபத்தில் நடனமாடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி இருந்தார். அந்த வீடியோ பெண் ரசிகை ஒருவர் ‘அம்மாவா இருந்துட்டு இந்த ஆட்டம் போடலாமா’ எனக் கேட்டு கமெண்ட் செய்திருந்தார்.

அவரது கமெண்ட்டால் கடுப்பான விஜயலட்சுமி ‘அம்மானா மூளையில உக்காந்துக்குட்டு அழணும் இல்ல..  அவ்ளோதான் என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு, இனிமே வாழ்க்கைய மத்தவங்களுக்கு அர்ப்பணிச்சுட்டேன், நான் ஒரு தியாகினு…  நீங்க வேணா அத பண்ணுங்க.. உங்களுக்கு தியாக செம்மல்னு சிலை வைப்பாங்க. எனக்கு இன்னும் வாழ்க்கை இருக்கு. உங்கள மாதிரி ஆளுங்களாலதான் நிறைய பெண்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள்.. நீங்க குடும்ப குத்து விளக்கா இல்ல… இதெல்லாம் செய்ய முடியாத பொறாமைல கமெண்ட் பண்ணி இருக்கீங்களான்னு தெரியல மேடம்.” என தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.