செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 14 மே 2024 (09:23 IST)

ஜெட்லியின் படத்தை ரீமேக் ஆசைப்படும் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன்!

மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் மதுர வீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இன்னும் அவர் ஹிட் கொடுக்க முடியாமல் போராடி வருகிறார். இவர் நடித்த ‘மதுர வீரன்’ திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ஓரளவு அவருக்கான  அடையாளத்தைப் பெற்று தந்தது. இதையடுத்து இப்போது அவர் படை தலைவன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அதே போல விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் ஆர்வமாக இருக்கிறார். நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் அவரும் நடிகராக அறிமுகமாக உள்ளதாக அறிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ஜெட்லியின் படமான மை பாதர் இஸ் எ ஹீரோ என்ற படம் என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த படம். அதில் நானும் அவரும் இணைந்து நடிக்க வேண்டும் என அவர் ஆசைப்பட்டார். ஆனால் அது நடக்கவில்லை. ஆனால் இப்போது அந்த படத்தை நான் ரீமேக் செய்யலாம் என முடிவெடுத்துள்ளேன். காலம் எப்படி கைகொடுக்கிறது என்று பார்க்கலாம்” எனக் கூறியுள்ளார்.