ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Modified: புதன், 26 ஏப்ரல் 2017 (11:57 IST)

நடிகைக்கு உதவி செய்த விஜய்

நடிப்பதற்கு நெர்வஸாக இருந்த நடிகைக்கு உதவி செய்துள்ளார் பின்னணிப் பாடகரும், நடிகருமான விஜய் யேசுதாஸ்.

 
மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் தனா. விஜய் யேசுதாஸ் – அம்ரிதா கூட்டணியில் ‘படைவீரன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா. 
 
ஹீரோயினாக நடிக்கும் அம்ரிதா, சென்னையில் பிறந்து, பெங்களூரில் வளர்ந்தவர். அங்கு வேலை பார்க்கும்போது  குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் வழியே சினிமாவுக்கும் பயணப்பட்டிருக்கிறார். பெங்களூரில்  வளர்ந்தாலும் அழகாகத் தமிழ் பேசும் அம்ரிதாவே டப்பிங்கும் பேசுகிறாராம். 
 
பாவாடை – தாவணி கட்டி கிராமத்துப் பெண்ணாக நடிப்பது அவருக்குப் பிடித்திருக்கிறதாம். ஆனால், இந்த தேனி மாவட்டத்து  ஸ்லாங் தான் வரவே மாட்டேங்குது என்று செல்லமாக அலுத்துக் கொள்கிறார். ஆரம்பத்தில் இவர் நெர்வஸாக இருந்தபோது, விஜய் யேசுதாஸ் தான் நடிக்க உதவியாக இருந்தாராம்.