''ஜவான்'' பட புரமோசனில் கலந்துகொள்ளும் விஜய் ?
ஷாருக்கான்-அட்லீ கூட்டணியில் உருவாக்கியுள்ள ஜவான் படத்தின் புரமோசனில் விஜய் கலந்துகொள்ளவார் என தகவல் வெளியாகிறது.
பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கியுள்ள படம் ஜவான். இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி என முன்னணி தமிழ் நடிகர்களும் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் மூலம் இந்தியிலும் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார் அனிருத்.
இப்படத்தின் முதல் சிங்கில் வந்த இடம் என் காடு, நீதான் பலியாடு என்ற பாடல் 'டி சீரீஸ்-தமிழ் யூடியூப்' பக்கத்தில் வெளியிடப்பட்டு பல மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
ஜவான் படம் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், 2 வது சிங்கில் Hayyoda பாடல் கடந்த 14 ஆம் தேதி வெளியானது.
இந்த நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ஜவான் படம் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இப்பட புரமோசனில் விஜய் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.
இப்பட புரமோசனுக்காக ஜவான் படக்குழுவினர் இந்தியாவில் பல நகரங்களுக்கு செல்லவுள்ளனர். இந்த நிலையில், ஜவான் பட புரமோசனில் விஜய் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகிறது.
விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் ஆகிய 3 படங்களை அட்லீ இயக்கியது குறிப்பிடத்தக்கது.