வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Arun Prasath
Last Modified: புதன், 5 பிப்ரவரி 2020 (19:41 IST)

”நான் ஏன் விஜய் படத்தில் வில்லன் ஆனேன்?” மனம் திறக்கும் விஜய் சேதுபதி

மாஸ்டர் தர்ட் லுக்கில் விஜய் சேதுபதி

மாஸ்டர் திரைப்படத்தில்  வில்லன் கதாப்பாத்திரத்தை ஒப்புக்கொண்டீர்கள்? என்ற கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலளித்துள்ளார்.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் “மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக ஒப்புக்கொண்டது ஏன்?” என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “எனக்கு ஹீரோ, வில்லன் என்ற இமேஜ் பற்றியெல்லாம் கவலை இல்லை, லோகேஷ் கனகராஜ் இந்த கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார். எனக்கு பிடித்திருந்தது. நெகட்டிவ் ரோல் என்பதற்காக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வாய்ப்பை இழக்க விரும்பவில்லை” என பதிலளித்துள்ளார்.

விஜய் சேதுபதி முன்னதாக விக்ரம் வேதா, பேட்ட ஆகிய திரைப்படங்களில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.