விஜய்சேதுபதியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
மாதவனுடன் இணைந்து முதன்முதலாக விஜய்சேதுபதி நடித்த 'விக்ரம்வேதா' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் நல்ல வசூலை தந்து கொண்டிருக்கும் நிலையில் விஜய்சேதுபதியின் அடுத்த பட ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கும் படங்களில் ஒன்று 'புரியாத புதிர்'. இந்த படத்தின் ரிலீஸ் ஒருசிலமுறை தள்ளிப்போய்க்கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த படம் செப்டம்பர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
விஜய்சேதுபதி, காயத்ரி, ரமேஷ் திலக், சோனியா தீப்தி, அர்ஜூனன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார். சாம் இசையமைத்துள்ள இந்த படத்தை ஜேஎஸ்கே பிலிம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.