வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By bala
Last Updated : சனி, 7 ஜனவரி 2017 (16:46 IST)

வடசென்னை படத்தை கைகழுவினாரா விஜய் சேதுபதி?

அரசல் புரசலாக பேசிக் கொண்டிருந்தது இப்போது தெருவுக்கே வந்துவிட்டது. வெற்றிமாறனின் வடசென்னை படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகினார் என்பதுதான் கோடம்பாக்கத்தின் இப்போதைய ஹாட் தகவல்.

இதோ அதோ என்று பல வருடங்கள் இழுத்தடித்த வடசென்னையை வெற்றிமாறன் சென்ற வருடம்தான் தொடங்கினார். முதல் ஷெட்யூல்டில் விஜய் சேதுபதி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இரண்டாவது ஷெட்யூல்ட் எப்போது என்று தெரியவில்லை. வடசென்னையின் முக்கிய ஹீரோ தனுஷ், வேறு படங்களில் பிஸியாக இருக்கிறார்.


 

எப்போது தொடங்கும், எப்போது நமது காட்சிகள் படமாக்கப்படும் என்பது தெரியாததால் படத்திலிருந்தே விஜய் சேதுபதி விலகியதாக கூறுகிறார்கள்.

ஆனால், இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.