செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 12 ஆகஸ்ட் 2020 (18:11 IST)

மகேஷ் பாபுவின் சவாலை ஏற்றுக்கொண்ட விஜய்… ஆனால் அதில் ஒரு தவறு செய்துவிட்டார்! என்ன தெரியுமா?

மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று செடி நட்ட புகைப்படம் வெளியிட்ட நடிகர் விஜய் அந்த சேலஞ்சை தொடரும் விதமாக வேறு யாரையும் டேக் செய்யாமல் விட்டுவிட்டார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு சமீபத்தில் தளபதி விஜய்க்கு கிரீன் இந்தியா சேலஞ்ச் ஒன்றை விடுத்தார் என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த சேலஞ்சை தளபதி விஜய் அவர்கள் ஏற்று நிறைவேற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று தளபதி விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று செடிகளை நட்டு, இதுகுறித்த குறித்த புகைப்படங்களையும் பதிவு செய்தார். இது சம்மந்தமான புகைப்படங்கள் வைரல் ஆகின.

இந்நிலையில் மகேஷ் பாபுவின் சேலஞ்சை ஏற்ற விஜய் அந்த சேலஞ்சை தொடரும் விதமாக அதில் வேறு யாரையாவது டேக் செய்திருக்க வேண்டும். ஆனால் அதை அவர் செய்யவில்லை. இது குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.