புதன், 25 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: வியாழன், 8 ஜூன் 2017 (18:09 IST)

விஜய் ஹீரோயினுக்கா இந்த நிலமை?

விஜய் தயாரித்த படத்தில் ஹீரோயினாக நடித்தவர், தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

 
விஜய் தயாரிப்பில், சந்திரசேகர் கதை எழுத, ஷோபா சந்திரசேகர் இயக்கிய படம் ‘நண்பர்கள்’. நீரஜ், மம்தா குல்கர்னி,  நாகேஷ், விவேக், மனோரமா உள்ளிட்டவர்கள் நடித்த இந்தப் படம், 1991ஆம் ஆண்டு வெளிவந்தது. படம் அவ்வளவாக  ஓடவில்லை என்றாலும், சில பாடல்கள் மட்டும் ஹிட்டாகின. இந்தப் படத்தில் அறிமுகமான மம்தா குல்கர்னி, அதன்பின்னர்  பல பாலிவுட் படங்களில் நடித்தார். பிறகு, நடிப்பதை விட்டுவிட்டு விக்கு கோஸ்வாமி என்பவரைக் காதலித்து திருமணம்  செய்து கொண்டார்.
 
சர்வதேச கடத்தல் மன்னனான விக்கி கோஸ்வாமி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சோதனையில் 2000 கோடி மதிப்பிலான  போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையவர். அப்போதே விக்கி கோஸ்வாமியும், மம்தா குல்கர்னியும் தலைமறைவாகி விட்டனர். இந்நிலையில், அவர்கள் இருவரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ள நீதிமன்றம், அவர்கள் மீது  ஜாமீனில் வெளிவர முடியாதபடி பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.