செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 23 ஜூன் 2017 (21:48 IST)

தளபதி விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்

நடிகர் விஜய்யின் நண்பரான நடிகர் சஞ்சீவ் தொலைக்காட்சி சேனல் மூலம் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கூடவே மன்னிப்பும் கேட்டுள்ளார்.


 

 
நடிகர் விஜய்யின் நண்பரான சஞ்சீவ் தொலைக்காட்சி சீரியல் மூலம் பிரபலமானவர். படங்களில் நடிக்கும் வாய்ப்பை விடமால் முயற்சி செய்து வருகிறார். இவர் விஜய்க்கு பிரபல தொலைக்காட்சி சேனல் மூலம் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதோடு அவரிடம் மன்னிப்பும் கேட்டார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
ஒரு விஷயத்தில் உன்னை நான் கஷ்டப்படுத்தி விட்டேன். அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நீண்ட இடைவேளைக்கு பின் நடித்த வந்து ஒரு சண்டைக் காட்சியில் நடித்தேன். அதற்கு நீ வாழ்த்து கூறியது எனக்கு பெரிய விஷயமாக இருந்தது, என்றார்.