வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (19:59 IST)

விஜய் தந்தை அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு

SAC
விஜய்யின் தந்தை அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய சட்டப்படி குற்றம் என்ற படத்தை விளம்பரம் செய்வதற்காக விளம்பர நிறுவனம் ஒன்றில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
 
இந்த ஒப்பந்தத்தின்படி விஜய்யின் தந்தை பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதனை அடுத்து விளம்பர நிறுவனம் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது
 
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் விளம்பர நிறுவனத்திற்காக செலுத்த வேண்டிய 76 ஆயிரம் ரூபாயை உடனே செலுத்த வேண்டுமென பேசிய எஸ்.ஏ.சிக்கு நீதிமன்றாம் உத்தரவிட்டதை எஸ்.ஏ.சி அந்த பணத்தை செலுத்தவில்லை என தெரிகிறது 
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத எஸ்.ஏ.சி அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது