விஜய் ஆண்டனி பட தயாரிப்பாளரின் மகள் திருமணம்!
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயலின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு சினிமா பிரபலங்கள் வாழ்த்தினர்.
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர் தனஞ்செயன். இவர், தற்போது, விஜய் ஆண்டனி நடிக்கும் கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், காக்கி உள்ளிட்ட பல படங்களை தயாரித்து வருகிறார்.
இவரது மூத்த மகள் ரேவதியின் திருமணம் இன்று சென்னை அம்பத்தூரில் உள்ள பிஎஸ்பி கன்வென்ஷன் ஹாலில் நடந்தது.
இந்த திருமண விழாவில், நடிகர் சிவக்குமார், கலைப்புலி எஸ் தாணு, லலித்குமார், சுரேஷ் காமாட்சி, விஜய் ஆண்டனி, சிபி சத்யராஜ், பிரசாந்த், உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்தப் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Edited by Sinoj