1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வியாழன், 25 ஜனவரி 2018 (22:16 IST)

சிவகார்த்திகேயனுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்

சிவகார்த்திகேயன் ஓகே சொல்வதற்காக காத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். ‘போடா போடி’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன், அதன்பிறகு வாய்ப்பு கிடைக்காததால் பாடலாசிரியர், நடிகர் எனப் பல அவதாரங்கள் எடுத்தார். அதன்பிறகு கிடைத்ததுதான் ‘நானும் ரெளடி தான்’ வாய்ப்பு. அந்தப் படம் ஹிட்டாக, அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆவலாக உள்ளனர்.

அதில் முந்திக் கொண்டவர் சூர்யா. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ சமீபத்தில் ரிலீஸானது. அடுத்து, சிவகார்த்திகேயனை வைத்து இயக்கப் போகிறார் விக்னேஷ் சிவன் என்கிறார்கள். சிவகார்த்திகேயன் கதை கேட்டு ஓகே சொல்வதற்காகக் காத்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.
 
உண்மை என்னவென்றால், ‘நானும் ரெளடி தான்’ படத்துக்கு முன்பே சிவகார்த்திகேயனுக்கு கதை சொல்லியிருக்கிறார் விக்னேஷ் சிவன். ஆனால், ‘போடா போடி’ தோல்விப்படம் என்பதால், ‘அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்’ என்றிருக்கிறார் சிவகார்த்திகேயன். ‘நானும் ரெளடி தான்’ ஹிட்டுக்குப் பிறகுதான் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.