ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 12 ஏப்ரல் 2023 (14:26 IST)

ரெட் ஜெயண்ட் மூவிஸ் பணியாளர்களுக்கு தங்க காசு பரிசளித்த விடுதலை தயாரிப்பாளர்!

மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. ரசிகர்கள் மட்டும் இல்லாமல் திரையுலகைச் சேர்ந்தவர்களும் கூட பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். ஆனால் பள்ளி தேர்வுகள் மற்றும் ஐபிஎல் போன்றவற்றால் படத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகள் விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மே மாதத்தில் மீதமுள்ள காட்சிகளை தொடர்ந்து 20 நாட்கள் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழு சக்ஸஸ் பார்ட்டி ஒன்றை கொண்டாடியுள்ளது. அதில் விடுதலை படத்தை சிறப்பாக ரிலிஸ் செய்து வெற்றியை சாதமாக்கிய ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ஒரு பவுன் தங்க காசு பரிசாக அளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளாராம்.