1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2024 (11:45 IST)

விடுதலை 2 படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங்குக்கான பணிகள் தொடக்கம்!

கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் தொடங்கி இறுதிகட்டத்தில் உள்ளது.

இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில்  தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வரும் நிலையில் வெற்றிமாறன் முடிவே இல்லாமல் ஷூட்டிங்கை நடத்திக் கொண்டுவருகிறார் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் டிசம்பர் 20 ஆம் தேதி படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் சில காட்சிகள் படமாக்கப்படவில்லை. அதற்கான வேலைகள் தற்போது தொடங்கியுள்ளன. வண்டலூர் அருகே அந்த காட்சிகளைப் படமாக்குவதற்கான அரங்கம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.