வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 25 மார்ச் 2022 (12:06 IST)

”தமிழ் தெரிந்தால் வாய்ப்புக் கிடைக்காது… ஆனால்?” – வெற்றிமாறன் பகிர்ந்த கருத்து!

இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.

கேரளாவில் நடந்துவரும் சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு இயக்குனர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு வருகின்றனர். அதில் தமிழ் சினிமாவில் இருந்து இயக்குனர் வெற்றிமாறன் கலந்துகொண்டு உரையாடியது கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவில் நடந்துள்ள மாற்றங்கள் குறித்து பேசியுள்ள அவர் ‘ முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் தமிழ் பேச தெரிந்த பெண்களுக்கு ஹீரோயினாக வாய்ப்புக் கொடுக்க மாட்டார்கள். ஆனால் இப்போது அந்த நிலைமை மாறியுள்ளது’ எனக் கூறியுள்ளார்.