செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : திங்கள், 20 மார்ச் 2023 (23:56 IST)

வெற்றிமாறனின் ‘விடுதலை’ அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

viduthalai
பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர் என்பதும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி சற்று முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
விடுதலை திரைப்படம் மார்ச் 31ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக வடக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனை அடுத்து இந்த படத்தை புரமோஷன் செய்ய பட குழுவின் திட்டமிட்டுள்ளனர் என்பதும் புரமோஷன் நிகழ்ச்சிகள் விஜய் சேதுபதி சூரி உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் நிலையில் மார்ச் 31ஆம் தேதி முதலாம் பாகம் வெளியாக இருப்பதாகவும் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதாகவும் தகவல்களாகியுள்ளன.



 
Edited by Mahendran