சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் இணைந்த பழம்பெரும் நடிகை!
சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் மாவீரன் என்ற திரைப்படத்தை மடோன் அஸ்வின் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் இன்று காலை வெளியானது
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் பழம்பெரும் நடிகை சரிதா முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்த சரிதா, இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பது அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
மேலும் இந்த படத்தில் யார் யார் இணையப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்