தெலுங்கு பேசப் போகிறது வேதாளம்
தமிழின் முன்னணி நடிகர்களின் படங்கள் தமிழில் வெளியாகும் அதேநாள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாகும்.
தெலுங்கில் தமிழ்ப் படத்தை ரீமேக் செய்யும் எண்ணமிருந்தால் மட்டும் வெளியாகாது.
சமீபத்தில் தமிழில் வெளிவந்து வெற்றி பெற்ற தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ராம் சரண் நடிப்பதால், தனி ஒருவன் தெலுங்கில் வெளியாகவில்லை.
வேதாளம் படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர். அஜித்தின் படங்கள் தமிழில் வெளியாகும் அதேநாள் தெலுங்கிலும் வெளியாகும்.
அதேபோல் வேதாளத்தையும் வெளியிட பணிகள் நடந்து வருகின்றன. தெலுங்கில் அவேஷம் என்ற பெயரில் வேதாளத்தை வெளியிடுகின்றனர்.
நவம்பர் 10 தமிழில் வேதாளம் வெளியாகும் அதேநாளில் அவேஷத்தையும் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.