விஜய்யின் ’வாரிசு’ தெலுங்கு வெர்ஷன் பொங்கலுக்கு ரிலீஸாகாதா?… தில் ராஜு எடுத்த முடிவு!
விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் ஐதராபாத் என மாறி மாறி படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகும் இந்த படம் தமிழில் பொங்கல் அன்று வெளியாக உள்ள நிலையில் தெலுங்கில் நான்கு நாட்கள் கழித்தே வெளியாகும் என சொல்லப்படுகிறது.
ஏனென்றால் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகும் ஆதிபுருஷ் திரைப்படம் சங்கராந்தி அன்று ரிலீஸாகிறதாம். அதனால் வாரிசு திரைப்படம் 4 நாட்கள் தாமதமாக ரிலீஸாகிறதாம்.